Table of Contents
தேவையான பொருட்கள்
Ingredient | Amount |
---|---|
போன்லெஸ் சிக்கன் | 200 grams |
தயிர் | ½ cup |
இஞ்சி பூண்டு விழுது | 1 tsp |
மஞ்சள் தூள் | ½ tsp |
சீரக தூள் | ½ tsp |
தக்காளி ப்யூரி | 2 cups |
க்ரீம் | ½ cup |
கரம் மசாலா | 1 tsp |
உப்பு | சிறிதளவு |
தக்காளி சாற்றை தயாரிக்க
தக்காளிகளை எடுத்து மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை சுடு தண்ணீரில் கொதிக்க விடவும். பிறகு அதை எடுத்து குளிர் தண்ணீரில் குளிர்விக்கவும்.இப்போது தக்காளி மேல் உள்ள தோலை பிரித்தெடுக்கலாம்.பிரித்து எடுத்த தக்காளி சக்கையை மசித்தால் தக்காளி சாறு கிடைக்கும்.
சிக்கன் மேரினேசன் செய்ய
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய கோழி துண்டுகளை இந்த கலவையில் போட்டு பிரட்டி ஒரு ஓரமாக பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்முறை
-
ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.சூடான எண்ணெயில் மாறினேஷன் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வறுக்கவும்
-
சிக்கன் முழுமையாக வெந்து விடாமல் வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
-
அதே வானலியில் தக்காளி சாற்றை சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் சமைக்கவும்.இதனால் தக்காளியின் பச்சை வாசனை போய்விடும்
-
பிறகு வருத்த கோழி துண்டுகளை தக்காளி சாற்றுடன் சேர்த்து கலக்கவும்.கிரீமையும் உப்பையும் சேர்த்து குறைந்த தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக சமைக்கவும்.
-
குழம்பு தடிப்பாக ஆகும் வரை சமைத்து எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது சுவையான சிக்கன் டிக்கா மசாலா ரெடி.
சேர்த்து பரிமாறலாம்
சாதம் அல்லது நான் உடன் பரிமாறலாம்.